புங்குடுதீவில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது | தினகரன்

புங்குடுதீவில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ். புங்குடுதீவு பகுதியில் 16 கிலோ 05 கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களிடமிருந்து கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நேற்று (20) கடற்படையினரும் போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸாரும் இணைந்து நடத்திய சோதனையின் இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கேரள கஞ்சா, 08 பொதிகளில் அடைக்கப்பட்டு, பற்றையினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அத்தோடு, கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் பயணித்த கப் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

மன்னார் மற்றும் வவுனியாவை சேர்ந்த 29, 42 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்டுள்ள கேரள கஞ்சா மற்றும் கப் வாகனத்துடன் சந்தேக நபர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.


Add new comment

Or log in with...