மதரஸாக்களை கல்வி அமைச்சு மேற்பார்வை செய்ய கலந்துரையாடல்கள் | தினகரன்

மதரஸாக்களை கல்வி அமைச்சு மேற்பார்வை செய்ய கலந்துரையாடல்கள்

மதரஸாக்களை கல்வி அமைச்சின் கீழ் மேற்பார்வை செய்வதற்கான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் நேற்று(20)வாய்மூல விடைக்கான வினா நேரத்தின்போது ஆனந்த அளுத்கமகே எம்.பி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். 

இலங்கையில் தனியார், சர்வதேச பாடசாலைகள் இன, மத அடிப்படையில் செயற்படுவது தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஆனந்த அளுத்கமகே எம்.பி கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திடம் கேள்வி எழுப்பினார். 

இதற்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் பதிலளிக்கும்போதே தனியார், சர்வதேச பாடசாலைகள் தொடர்பான அதிகாரம் கல்வி அமைச்சிடம் இல்லை. அவை தொடர்பில் புதிய கல்விச் சட்டம் உருவாக்கப்பட்டு வருகின்றது. அதேவேளை இலங்கையில் செயற்படும் மதரஸாக்களை கல்வி அமைச்சின் கீழ் மேற்பார்வை செய்வது தொடர்பில் முஸ்லிம் விவகார அமைச்சுடன் கலந்துரையாடல்களும் நடைபெற்று வருகின்றன என்றார். 

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்  


Add new comment

Or log in with...