தொழில் திணைக்களத்தின் “மெஹெவர பியச” கட்டடம் | தினகரன்


தொழில் திணைக்களத்தின் “மெஹெவர பியச” கட்டடம்

ஜனாதிபதி திறந்து வைத்தார்

நாட்டின் உழைக்கும் வர்க்கத்தினருக்கு சிறந்த சேவையை ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொழில் திணைக்களத்தின் “மெஹெவர பியச” கட்டடத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (20) திறந்து வைத்தார். 

2009ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கட்டட நிர்மாணப் பணிகளுக்காக 8,500மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. தற்போது அரசாங்கத்திற்கு சொந்தமான பாரிய மற்றும் உயர்ந்த கட்டடமாகவுள்ள இக்கட்டடம் 32மாடிகளையும் நவீன வசதிகளையும் கொண்டுள்ளது.  

தொழில் அமைச்சு, தொழில் திணைக்களம் மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் என்பன இங்கு தமது சேவைகளை வழங்கி வருவதுடன், இலங்கை மத்திய வங்கி மற்றும் இறைவரித் திணைக்களத்தின் சில பிரிவுகளும் 05மாடிகளைக் கொண்ட வாகன நிறுத்துமிடத்தையும் பொதுமக்களுக்கான பொது வசதிகளையும் இந்த கட்டடம் கொண்டுள்ளது. 

நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து கட்டடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அதனைப் பார்வையிட்டார். 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான ரஞ்சித் மத்தும பண்டார, வடிவேல் சுரேஷ், தொழில் ஆணையாளர் நாயகம் ஏ.விமலவீர ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். 


Add new comment

Or log in with...