வாவியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் சடலம் | தினகரன்


வாவியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் சடலம்

அம்பாறை, திருக்கோவிலில் வாவியில் வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று (20) காலை 7.30 மணியளவில், திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம், பாலக்குடா அம்மன் கோவிலின் பின்பகுதியில் அமைந்துள்ள வாவியில் வீழ்ந்த நிலையில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

திருக்கோவில், விநாயகபுரத்தை சேர்ந்த கிருஷ்ணபிள்ளை மாலினி (37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், அவர் மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவர் என தெரிவிக்கப்படுவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Add new comment

Or log in with...