வவுனியாவில் திருக்குறள் பெருவிழா நடத்துவதற்கு நடவடிக்கை | தினகரன்


வவுனியாவில் திருக்குறள் பெருவிழா நடத்துவதற்கு நடவடிக்கை

வவுனியாவில் திருக்குறள் பெருவிழா நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

உலகப் பொதுமறையான திருக்குறளினை அனைவரும் உணரும் வகையில் ஜனாதிபதியின் எண்ணக்கருவில் ஆளுனரின் வழிகாட்டலுடன் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் திருக்குறள் வாரமானது எதிர்வரும் 23 ஆம் திகதி  தொடக்கம் 30 ஆம் திகதி  வரையில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

அதற்கமைவாக, வவுனியாவில் திருக்குறள் பெருவிழா எதிர்வரும் 24 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு வவுனியா பிரதேச குடியிருப்பு கலாசார மண்டபத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், விழா தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் இன்று(20)நடைபெற்றது.

இதன்போது திருக்குறள் பெருவிழா நிகழ்வு ஏற்பாடுகள் மற்றும் அதன் முக்கியத்துவம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இக்கலந்துரையாடலில் வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர், அமைச்சின் அதிகாரிகள், வவுனியா மாவட்டத்திற்குட்பட்ட பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், வலய கல்வி பணிமனை அதிகாரிகள், ஆசிரிய ஆலோசகர்கள், கலாசார உத்தியோகத்தர்கள், கலைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

(வவுனியா விசேட நிருபர்– கே. வசந்தரூபன்)

 


Add new comment

Or log in with...