புகையிரதம் மோதி 2 பசுக்கள் இறப்பு | தினகரன்


புகையிரதம் மோதி 2 பசுக்கள் இறப்பு

வவுனியா,தாண்டிக்குளத்தில் புகையிரதம் மோதி இரண்டு பசுக்கள் இறந்துள்ளதோடு,  ஒரு பசு  காயமடைந்துள்ளது.

இன்று காலை (20)  யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரதமே,  தண்டவாளத்தில் நின்ற மூன்று பசுக்களை  மோதியுள்ளது.

இதன்போது, புகையிரதத்தில் அகப்பட்ட இரண்டு பசுக்களும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளன.

காயமடைந்த பசுவுக்கு  அப்பகுதி மக்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.

(வவுனியா விசேட நிருபர்– கே.வசந்தரூபன்)


Add new comment

Or log in with...