மருத்துவ சிகிச்சை முறைகேடுகளை சித்தரிக்கும் ‘மெய்’ | தினகரன்


மருத்துவ சிகிச்சை முறைகேடுகளை சித்தரிக்கும் ‘மெய்’

நிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘மெய்’ படம் இம் மாதம் 23 ஆம் திகதி வெளியாகிறது. இந்த படம் மருத்துவ சிகிச்சை முறைகேடுகளை சித்தரிக்கும் கதையாகும்.

சுந்தரம் புரொடக்சன்ஸ் சார்பில், ராம் சுந்தரம், பிரீத்தி கிருஷ்ணா ஆகியோர் தயாரித்து உள்ள படம் ‘மெய்’. இதில் கதாநாயகனாக நிக்கி சுந்தரம் அறிமுகமாகி உள்ளார். இவர் புகழ்பெற்ற டி.வி.எஸ்.சுந்தரம் குடும்பத்தை சேர்ந்தவர். கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து உள்ளார். கிஷோர், சார்லி, அஜய்கோஷ், ராம்தாஸ் உள்ளிட்ட மேலும் பலர் நடித்து உள்ளனர்.இந்த படத்தை எஸ்.ஏ.பாஸ்கரன் இயக்கியுள்ளார்.


Add new comment

Or log in with...