இலகுவான உடற்பயிற்சிகள் | தினகரன்


இலகுவான உடற்பயிற்சிகள்

பரபரப்பான இன்றைய சூழ்நிலையில் சிலர் உடற்பயிற்சி செய்வதை தவிர்த்து விடுகின்றனர். போதிய நேரமின்மை உள்ளிட்ட இன்னோரன்ன காரணிகளினால் உடற்பயிற்சி செய்வதை பெரும்பாலானோர் தவிர்த்து விடுகின்றனர்.

எமது தேக ஆரோக்கியத்தை பேணுவதில் உடற்பயிற்சியும் முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதோடு, எமது தேக ஆரோக்கியத்தைப் பேண  வேண்டிய கடப்பாடு முதலில் எமக்கே உள்ளது. ஆகையால், பெரியளவில் உடற்பயிற்சிகளை செய்ய முடியா விட்டாலும், சில சிறிய உடற்பயிற்சிகளை எம்மால் செய்ய முடியும்.  

உடற்பயிற்சி செய்யாதிருப்பதிலும் பார்க்க ஏதாவதொரு உடற்பயிற்சியில் ஈடுபடல் சிறந்தது. இந்நாள் வரை நீங்கள் உடற்பயிற்சி செய்யாவிட்டால்,இது உங்களுக்கு உடற்பயிற்சி செய்யசரியான தருணம்ஆரம்பிப்பதற்கு என்று மனதில் வைத்துக்கொண்டு உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.  ஆரம்பத்தில் இலகுவான பயிற்சிகளில் ஆரம்பித்து படிப்படியாக சொல்லப்பட்ட அளவுக்கு அதிகரிக்கலாம். நீங்கள் உங்கள் நாளாந்த நடவடிக்கைகளில் ஏற்படுத்தும் சிறிய மாற்றங்கள் மூலம் உடற்பயிற்சியின் அளவை அதிகரிக்கலாம். அதாவது காரில், பேரூந்து, புகையிரதம் போன்றவற்றை பயணிக்க பயன்படுத்துவதற்கு பதிலாக நடக்கலாம்.

நடத்தல்

இலகுவான அடிப்படையான ஓர்உடற்பயிற்சிஎன்பதோடு,அனைத்து வயதினரும் செய்யக்கூடியஉடற்பயிற்சியாகும்.

ஓடுதல்

இப்பயிற்சி கால்கள்,மூட்டுக்களை வலிமையாக்கும்என்பதோடு, முழங்கால் இடுப்பு பகுதிகளை ஆரோக்கியமாக்கும். இருதயத்தின் ஆரோக்கியத்தை கூட்டும்.

நீந்துதல்

இது ஒரு சிறந்த தொழிற்பாடாகும். நீரின் மிதக்கும்தன்மை எமது உடலுக்கு ஆதாரமாக அமைவதோடு,மூட்டுக்களில் உள்ள வலிகளை இலகுவாக நீக்க உதவும். நீச்சலானது,கீழ்வாதம்  உள்ளவர்களுக்கு சிறந்து.

குந்துதல்

ஆரம்பத்தில் இந்த பயிற்சியில் உங்கள் கால்கள் புதிதாக பிறந்த மான் குட்டியை போல தடுமாற்றம் காணும். எனினும் தொடர்ச்சியான பயிற்சி மூலம் உங்கள் உறுதி நிலையை மேம்படுத்தலாம். இப்பயிற்சி பின்முதுகு, இடுப்பு, முழங்கால், கணுக்கால் போன்றவற்றை பாதுகாக்க உதவும்.

உடற்பயிற்சியானது  எமது தேகத்தை  கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்என்பது குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...