காசல்ரீ சிசுவின் சடலம் தொடர்பில் தாய் கைது | தினகரன்


காசல்ரீ சிசுவின் சடலம் தொடர்பில் தாய் கைது

ஹட்டன், காசல்ரீ நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்டஆண் சிசுவின் தாய், ஹட்டன் பொலிஸாரினால் இன்று (20)  கைது செய்யப்பட்டுள்ளார் .

கடந்த சனிக்கிழமை(17)  காலை ஆண் சிசுவின் சடலம் ஒன்று காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மிதப்பதைக் கண்ட மீன்பிடியில் ஈடுபட்டவர்கள், இது தொடர்பில் ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். இதனைத் தொடர்ந்து, குறித்த சிசுவின் சடலம் மீட்கப்பட்டது.

இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்த ஹட்டன் பொலிஸார், இன்றையதினம் டிக்கோயா வனராஜா பகுதியில் வைத்து குறித்த சிசுவின் தாயை கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் கைது செய்யபட்ட சிசுவின் தாயை, ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(நோட்டன்  பிரிட்ஜ் நிருபர் -  எம்.கிருஸ்ணா)


Add new comment

Or log in with...