காசல்ரீ நீர்த்தேக்கத்தில் சிசுவின் சடலம் மீட்பு | தினகரன்

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் சிசுவின் சடலம் மீட்பு

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் சிசுவின் சடலம் மீட்பு-Babies Body Foudn at castlereigh Reservoir

காசல்ரீ நீர்த்தேக்கத்திலிருந்து  ஆண் சிசுவொன்றின் சடலம் இன்று (17)  காலை  மீட்கப்பட்டுள்ளதாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் 

குறித்த நீர்த்தேக்கத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த  ஒருவர், சடலம் நீரில் மிதப்பதை கண்டுள்ளார். இது தொடர்பாக குறித்த மீனவர், ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் சிசுவின் சடலம்  மீட்பு-Babies Body Foudn at castlereigh Reservoir

சிசுவின் சடலம் பிரேத பரசோனைக்காக டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(நோட்டன்  பிரிட்ஜ்  நிருபர் –நோட்டன் இராமச்சந்திரன்)

 


Add new comment

Or log in with...