Thursday, March 28, 2024
Home » கிழக்கின் முதலாவது குழந்தை நல மருத்துவப் பேராசிரியராக

கிழக்கின் முதலாவது குழந்தை நல மருத்துவப் பேராசிரியராக

டொக்டர் விஜி திருக்குமார் தெரிவு​

by damith
January 30, 2024 10:28 am 0 comment

கிழக்கின் முதலாவது குழந்தை நல மருத்துவப்பேராசிரியராக கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளரும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விசேட குழந்தை நல வைத்திய நிபுணருமான டொக்டர் விஜி திருக்குமார் தெரிவாகியுள்ளார்.

காரைதீவைச் சேர்ந்த வைத்திய கலாநிதி திருமதி விஜயகுமாரி திருக்குமார் கொழும்பு பல்கலைக்கழகம், லண்டன் றோயல் உயர் கல்லூரி என்பவற்றில் உயர் பட்டங்கள் பெற்றவர். MBBS, DCH, MD, FRCPCH எனப் பல மருத்துவ சேவைகள் பட்டங்கள் பெற்ற இவர், குழந்தை நலன் தொடர்பாக பல கட்டுரைகளையும் எழுதி வருகிறார்.

வரலாற்றில் இவர் தான் கிழக்கில் முதலாவது குழந்தை நல மருத்துவப்பேராசிரியர் என்ற பெருமையை பெறுகிறார். இவரது கணவர் வைத்திய கலாநிதி மார்க்கண்டு திருக்குமார் யாழ்.உரும்பிராயைச் சேர்ந்த மகப்பேற்று நிபுணராவார். அவரும் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவத்துறை பேராசிரியராவார்.

(காரைதீவு குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT