Friday, March 29, 2024
Home » இலங்கை டெஸ்ட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

இலங்கை டெஸ்ட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

by damith
January 30, 2024 8:16 am 0 comment

இலங்கைக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கான 16 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உபாதைக்கு உள்ளான முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் அணியில் இடம்பெறவில்லை.

இலங்கை மற்றும் ஆப்கான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் எதிர்வரும் பெப்ரவரி 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் மோதும் தலா மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த தொடரில் பங்கேற்பதற்கான ஆப்கான் அணி இன்று (30) இலங்கை வரவுள்ளது.

இந்நிலையில் அறிவிக்கப்பட்டிருக்கும் ஆப்கான் டெஸ்ட் அணியில் ரஷீத் கான் இடம்பெறாத நிலையில் சுழற்பந்து வீச்சாளர் காயிஸ் அஹமது அழைக்கப்பட்டுள்ளார். தவிர துடுப்பாட்ட வீரர் நூர் அலி, இடது கை சுழற்பந்து வீச்சாளர் சியா உர் ரஹ்மான், விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் முஹமது இஷாக் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் நவீட் சத்ரான் புதுமுக வீரர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அணி கடைசியாக கடந்த 2023 ஜூன் மாதம் டெஸ்ட் போட்டி ஒன்றில் ஆடியபோது, அந்த அணி பங்களாதேஷிடம் 546 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அந்த அணி டெஸ்ட் போட்டி ஒன்றில் இலங்கை அணியை எதிர்கொள்வது இது முதல்முறையாக அமையவுள்ளது.

ஆப்கான் அணி: ஹஷ்மதுல்லா ஷஹிதி (தலைவர்), இப்ராஹிம் சத்ரான், அப்துல் மலிக், நூர் அலி சத்ரான், ரஹ்மத் ஷா (உப தலைவர்), பாஹிர் ஷா, நாசிர் ஜமால், இக்ராம் அலிகில் (வி.கா.), முஹமது இஷாக் (வி.கா.), கைஸ் அஹமது, சியா உர் ரஹ்மான், சாஹிர் கான், யாமின் அஹமட்சாய், நிஜாத் மசூத், முஹமது சலீம் மற்றும் நவீட் சத்ரான்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT