Ribelz இன்டர்கிரேடட், ரிவிஎஸ் நிறுவனங்களுக்கு டிஜிட்டல் சந்தைப்படுத்தல் விருது | தினகரன்

Ribelz இன்டர்கிரேடட், ரிவிஎஸ் நிறுவனங்களுக்கு டிஜிட்டல் சந்தைப்படுத்தல் விருது

Ribelz இன்டர்கிரேடட் மற்றும் ரிவிஎஸ் ஆகியவற்றுக்கு சிறந்த டிஜிட்டல் சந்தைப்படுத்தல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்ற ‘கோல்டன் குளோப் டைகர்ஸ்’ விருதுகள் வழங்கும் நிகழ்வில் இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. ரிவிஎஸூக்காக Ribelz இனால் வழங்கப்பட்ட டிஜிட்டல் மூலோபாயத்தினூடாக, சந்தைப்பங்கை பெருமளவு அதிகரித்துக் கொள்ள முடிந்ததுடன், துறையில் ரிவிஎஸ் இன் சந்தை நிலையையும் உயர்த்திக் கொள்ள ஏதுவாக அமைந்திருந்தது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வின் போது இன்டர்கிரேடட் மற்றும் ரிவிஎஸ் லங்கா நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த விருதை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திடமிருந்து பெற்றுக் கொண்டனர். ‘கோல்டன் குளோப் டைகர்ஸ்’ விருதுகள் வழங்கலினூடாக சந்தைப்படுத்தல், வர்த்தக நாமம், கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு, சமூக புத்தாக்கம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் சகல தலைமைத்துவ நிலைகளை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளது. 

Ribelzஇன்டர்கிரேடட் இன் பிரதம நிறைவேற்று அதிகாரி இந்திக ஜயபால கருத்துத் தெரிவிக்கையில், “ரிவிஎஸ் லங்காவுக்கு நாம் வழங்கியிருந்த டிஜிட்டல் மூலோபாயத்தினூடாக, வர்த்தக நாம சென்றடைவு மேம்படுத்தப்பட்டிருந்ததுடன், விற்பனை அளவை அதிகரித்துக் கொள்ளவும் முடிந்தது. டிஜிட்டல் திட்டமொன்றினூடாக இது போன்ற அளவிடக்கூடிய பெறுபேறுகள் இலக்கு வைக்கப்பட வேண்டும். இலக்கு வைக்கப்படுவோரின் மொழியை பிரதிபலிக்கும் மற்றும் ஒவ்வொரு மக்கள் தொகைசார் பகுதிகளுக்குரிய திட்டங்களை வடிவமைக்கும் டிஜிட்டல் மூலோபாயங்கள் வெற்றிகரமாக அமையும். மேலும், டிஜிட்டல் மூலோபாயம் என்பது செயற்பாட்டை அடிப்படையாகக் கொண்டதுடன், முறையாக வடிவமைக்கப்பட்ட தன்னியக்க அம்சங்களை பயன்படுத்தும். Ribelz இன்டர்கிரேடட் இனால் ரிவிஎஸ் க்கு கடந்த இரண்டு வருட காலப்பகுதியினுள் வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் மூலோபாயம் என்பது இவற்றை அடிப்படையாகக் கொண்டமைந்திருந்தன. எவ்வாறாயினும், ரிவிஎஸ் இன் அதீத ஈடுபாடு மற்றும் பங்களிப்பு கிடைக்காவிடின், எம்மால் இவ்வாறான வினைத்திறன் வாய்ந்த திட்டமொன்றை வடிவமைத்திருக்க முடியாது.” என்றார்.  

டிஜிட்டல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக வெற்றியீட்டிய இந்த டிஜிட்டல் திட்டம் அமைந்திருந்ததுடன், 2018/19காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட புத்தாக்கமான டிஜிட்டல் மூலோபாயங்கள் மற்றும் பல்வேறு நிறைவேற்றல் செயற்பாடுகளினூடாக பெருமளவானோரை சென்றடைந்திருந்தது. அதன் காரணமாக, கோல்டன் குளோப் டைகர்ஸ் விருதுக்கான தெரிவுக்குழுவினால், Ribelz இன் ரிவிஎஸ் திட்டம் சிறந்த திட்டமாக தெரிவு செய்யப்பட்டிருந்தது. 

விருதுகளுக்கு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை தெரிவு செய்யும் முன்னர், கோல்டன் குளோப் டைகர்ஸ் விருதுகள் அணியினால் சமர்ப்பிக்கப்பட்ட செயற்திட்டங்களின் பெறுபேறுகள் தொடர்பில் ஆழமான ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, தெரிவுகள் மத்தியஸ்தர்கள் குழுவுக்கு அனுப்பப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. இந்த குழுவில் உலகளாவிய ரீதியிலிருந்து சிரேஷ்ட நிபுணர்கள் குழுவினர் அடங்கியிருந்தனர்.    


Add new comment

Or log in with...