உலக நட்பு தினத்தை கொண்டாடிய OPPO | தினகரன்


உலக நட்பு தினத்தை கொண்டாடிய OPPO

சமூக ஊடகத்தின் மூலம் போட்டியை நடத்தி உலக நட்பு தினத்தை OPPO ஸ்ரீலங்கா கொண்டாடியிருந்ததுடன், இதில் வெற்றிபெற்ற இரண்டு சோடி நண்பர்கள் OPPO விடமிருந்து சிறந்த பரிசுகளை வெற்றிகொண்டனர். 

இரசிகர்கள் தமது நெருக்கமான நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி படங்களை OPPO பேஸ்புக் பக்கத்தில் நட்புத் தொடர்பான எண்ணங்களுடன் பதிவேற்றுமாறு அழைக்கப்பட்டிருந்தனர். அந்தப் படத்திலுள்ள நண்பரை டக் செய்து #FriendsForever மற்றும் #OPPOF11Pro ஹாஷ்டக் செய்து பதிவேற்றி அதனை அதனை லைக் செய்தும், ஷெயார் செய்தும் இந்தப் போட்டிக்கான நுழைவினைப் பெற்றுக்கொண்டனர்.  

“உலக நட்பு தினப் போட்டியில் எமது இரசிகர்கள் காண்பித்த பேரரார்வம் மற்றும் மகிழ்ச்சி என்பன எம்மை உண்மையில் வசீகரித்தன. OPPO இரசிகர்கள் தமது நண்பர்களுடன் காண்பிக்கும் நெருக்கமானது அவர்கள் OPPO மீது காண்பிக்கும் நெருக்கத்துக்கான சாட்சியாக அமைகிறது” என OPPO ஸ்ரீலங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி பொப் லீ தெரிவித்தார்.  

சரியான நடைமுறைகளைப் பின்பற்றி அதிகூடிய லைக்ஸ் பெற்றுக்கொண்டதன் அடிப்படையிலேயே வெற்றியாளர்களின் தெரிவு அமைந்தது. 10,000ற்கும் அதிகமானவர்கள் இதில் இணைந்துகொண்டனர். விந்தியாவும் அவரடைய நண்பரும், ஷகீ நிமேஸ் மற்றும் அவருடைய நண்பர் ஆகியோரே இந்தப் போட்டியின் அதிஷ்ட வெற்றியாளர்களாகத் தெரிவுசெய்யப்பட்டனர். அவர்களுக்கு பல பரிசுகள் வழங்கப்பட்டன. 

சிறந்த selfie செயற்பாட்டைக் கொண்ட F தொடருக்கு அப்பால், F11 Pro பல்வேறு புத்தாக்கமான தொழில்நுட்பங்கள் மற்றும் rising கமரா Panoramic திரை, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வசதியை வழங்கக் கூடிய மெல்லிய வடிவமைப்பு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. Thunder Black மற்றும் Aurora Green இரட்டை நிறங்களில் கிடைக்கிறது.     


Add new comment

Or log in with...