பார்த்திபனின் 'ஒத்த செருப்பு' | தினகரன்

பார்த்திபனின் 'ஒத்த செருப்பு'

இயக்குநர் மற்றும் நடிகர் பார்த்திபன், தான் அடுத்து இயக்கியிருக்கும் படம் 'ஒத்த செருப்பு'.

'ஹவுஸ் ஃபுல்', 'புதிய பாதை', 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' என மாறுபட்ட படங்களை உருவாக்கியவர் பார்த்திபன். தனக்கென்றே ஒரு தனி பாணியில் படம் எடுப்பவர் என ரசிகர்களிடம் பெயரைச் சம்பாதித்து வைத்துள்ளார்.

பாடல் இல்லாத படம், கதை இல்லாத படம், க்ளைமாக்ஸ் இல்லாத படம் எனப் பல முயற்சிகளையும் எடுத்துள்ளார் பார்த்திபன். அந்த வரிசையில், 'ஒத்த செருப்பு' படமும் ஒரு புதிய முயற்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் ஒரே ஒரு கேரக்டர் தான். அது பார்த்திபன் மட்டும்தான். ஒரு வீட்டுக்குள் மாட்டிக் கொள்ளும் ஒரு மனிதனின் திகில் அனுபவங்களை சித்தரிப்பதாக இப்படம் அமைகக்ப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...