1st Test: SLvNZ; இலங்கைக்கு வெற்றி இலக்கு 268 | தினகரன்

1st Test: SLvNZ; இலங்கைக்கு வெற்றி இலக்கு 268

அகில தனஞ்சயவின் அபார பந்துவீச்சுக்கு மத்தியில் நியூசிலாந்து ஸ்திரம்-1st Test-SLvNZ-Target 268

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் காலியில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் வெற்றி இலக்காக 268 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து அணி.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுகளையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்றதோடு, பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 267 ஓட்டங்களை பெற்றதன் மூலம் 18 ஓட்டங்கள் மேலதிகமாக பெற்றது.

அகில தனஞ்சயவின் அபார பந்துவீச்சுக்கு மத்தியில் நியூசிலாந்து ஸ்திரம்-1st Test-SLvNZ-Target 268

அதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 285 ஓட்டங்களை பெற்றது.

அதற்கமைய போட்டியின் 4 ஆவது நாளான இன்று (17) இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 267 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸிற்காக ஆகக் கூடுதலாக பிஜே வொட்லிங் 77 ஓட்டங்களையும் டொம் லதம் 45 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இலங்கை அணி சார்பில் லசித் எம்புல்தெனிய 4 விக்கெட்டுகளையும், தனஞ்சய டி சில்வா 3 விக்கெட்டுகளையும் லஹிரு குமார 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

1 ஆவது இன்னிங்ஸ்
நியூசிலாந்து  249/10 (83.2)
ரொஸ் டெய்லர் 86 (132)
ஹென்ரி நிகொல்ஸ் 42 (78)
டொம் லதம் 30 (88)

அகில தனஞ்சய 5/80 (30.0)
சுரங்க லக்மால் 4/29 (15.2)

இலங்கை 267/10 (93.2)
நிரோஷன் திக்வெல்ல 61 (109)
குசல் மெண்டிஸ் 53 (89)
அஞ்சலோ மெத்திவ்ஸ் 50 (98)

அஜாஸ் பட்டேல் 5/89 (33.0)
வில்லியம் சொமர்வில்லே 3/83 (22.2)
ட்ரண்ட் போல்ட் 2/45 (20.0)

2 ஆவது இன்னிங்ஸ்
நியூசிலாந்து 285/10 (106.0)
பி ஜே வொட்லிங் 77 (173)
டொம் லதம் 45 (81)
வில்லியம் சொமர்வில்லே 40 (118)

லசித் எம்புல்தெனிய 4/99 (37.0)
தனஞ்சய டி சில்வா 3/25 (12.0)
லஹிரு குமார 2/31 (10.0)

வெற்றி இலக்கு: 268


Add new comment

Or log in with...