19 தேசிய கல்வியற் கல்லூரிகளில் 8,000 ஆசிரியபயிலுநர்கள் இணைப்பு | தினகரன்

19 தேசிய கல்வியற் கல்லூரிகளில் 8,000 ஆசிரியபயிலுநர்கள் இணைப்பு

செப்டம்பர் முதல் வாரம் ஆரம்பம்

தேசிய கல்வியற் கல்லூரிகளில் நடத்தப்படும் மூன்றாண்டு கால போதனா கல்வி பாடநெறியில் பயில்வதற்காக 2016 மற்றும் 2017 உயர்தர பெறுபேறுகளின் பிரகாரம் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.இதற்கெனநடத்தப்படும் நேர்முக பரீட்சை தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது.

இதன்பிரகாரம் நாடளாவிய ரீதியில் உள்ள 19 கல்வியற் கல்லூரிகளுக்கு 4,000 மாணவர்கள் வீதம் இரு குழுக்களாக (8000 மாணவர்கள்) சிங்களம் , தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடநெறிகளுக்காக செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இதன்படி 2019.01.25 இலக்கம் 2108 சுற்று நிருபத்தின் பிரகாரம் கல்வியற் கல்லூரி பாடநெறிகளுக்காக 68,000 பேர் விண்ணப்பித்தனர்.இவர்களில் 28,000 பேர் நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.


Add new comment

Or log in with...