அக்கரப்பத்தனை எல்பியன் பகுதியில் வீதி தாழிறக்கம் | தினகரன்


அக்கரப்பத்தனை எல்பியன் பகுதியில் வீதி தாழிறக்கம்

அக்கரப்பத்தனை  எல்பியன் பகுதியில் வீதி  தாழிறக்கம் ஹட்டனிலிருந்து போடைஸ் வழியாக, டயகம செல்லும் பிரதான வீதியில் அக்கரப்பத்தனை  எல்பியன் பகுதி பிரதான வீதியில் தாழிறக்கம்
ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியினுடான போக்குவரத்து ஒருவழி போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஆங்காங்கே மண் திட்டுகள் சரிந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனால் பொது மக்களை அவதானமாக செயற்படுமாறு
கோரப்பட்டுள்ளது.

தாழிறக்கம் ஏற்பட்ட பகுதியை சீரமைப்பதற்கு அக்கரப்பத்தனை பிரதேச சபையின் ஊடாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனினும் சீரமைக்கும் வரை அவ்வீதியினூடாக பயணங்களை மேற்கொள்ளும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செல்லுமாறும், கனரக வாகனங்கள் அவ்வீதியினூடாக பயணிக்க வேண்டாம் எனவும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அத்துடன் இந்த பகுதி மேலும் தாழிறங்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

(ஹற்றன் சுழற்சி நிருபர் – ஜி.கே. கிருஸாந்தன்)  

 


Add new comment

Or log in with...