சிலாபம் முன்னேஸ்வரம் கொடியேற்றம் | தினகரன்


சிலாபம் முன்னேஸ்வரம் கொடியேற்றம்

வரலாற்று சிறப்பு வாய்ந்த சிலாபம் முன்னேஸ்வரம் முன்னைநாதஸ்வாமி ஸ்ரீ வடிவாம்பிகை  ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்​ கொடியேற்றத்துடன் இன்று (17) ஆரம்பமாகியது.

கொடிச்சீலை யானையில் சுமந்த வண்ணம் ஆலயத்தைச் சுற்றி வீதி வழியாக எடுத்து வரப்பட்டு ,பின்னர் கொடி ஏற்றப்பட்டது.

கொடித்தம்பத்திற்கு அபிஷேகமும் இடம்பெற்றது.  இந்நிகழ்வில்  பெருந்தொகையான பக்த அடியார்கள் கலந்து கொண்டு அம்பாளின் அருளைப் பெற்றுக் கொண்டனர்.

முக்கிய நிகழ்வுகளாக தீ மிதிப்பு உற்சவம் செப்டெம்பர் 08 ஆம் திகதியும், வேட்டைத் திருவிழா செப்டெம்பர் 11 ஆம்திகதியும் தேர்த்திருவிழா செப்டெம்பர் 12 ஆம் திகதியும் தீர்த்தோற்சவம் செப்டெம்பர் 13 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது

-உடப்பு குறூப்  நிருபர் -


Add new comment

Or log in with...