உலகின் முதலாவது 5G ஹோட்டல் அவுஸ்திரேலியாவில் | தினகரன்


உலகின் முதலாவது 5G ஹோட்டல் அவுஸ்திரேலியாவில்

உலகின் முதலாவது 5G ஹோட்டல் அவுஸ்திரேலியாவில்-Oppo 5G Hotel in Australia

OPPO ஆனது 40 அடி கப்பல் கொள்கலனை பல அம்சங்கள் கொண்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஹோட்டலாக மாற்றியுள்ளது

நீங்கள் ஒரு கடுமையான தொழில்நுட்ப விரும்பியாகவோ அல்லது அதிக செலவின்றி நவீன ஆடம்பர பயணத்தை நோக்கிச் செல்லும் ஆர்வமுள்ள பயணியாகவோ இருக்கலாம், அவ்வாறான உங்களுக்கு அவுஸ்திரேலியாவில் உள்ள OPPO இன் 5G ஹோட்டலானது தங்குமிட தேவைகளுக்கு பதிலாக அமைகின்றது.

உலகின் முதலாவது 5G ஹோட்டல் அவுஸ்திரேலியாவில்-Oppo 5G Hotel in Australia

5G மூலம் சாத்தியமாகின்ற விடயங்கள் பற்றி அனைவருக்கும் ஒரு விளக்கம் அளிக்கும் வகையில், OPPO அவுஸ்திரேலியா ஆனது, உலகின் முதலாவது பயணக்கக்கூடிய 5G இனால் வலுவூட்டப்பட்ட ஸ்மார்ட் ஹோட்டலை உருவாக்கியுள்ளது. முழு ஹோட்டலும் OPPO இன் Reno ஸ்மார்ட்போன், 5G வலையமைப்பு (5G Network) மற்றும்  புதிய தொழில்நுட்பத்தால் நிரம்பியுள்ளது. இது இன்னும் சில மாதங்களில் அவுஸ்திரேலியா முழுவதும் 5G வலையமைப்பு காணப்படும் இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அதற்கமைய, அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பனின், கோல்ட் கோஸ்ட்டிலுள்ள (Gold Coast) கலையின் தாயகம் எனப்படும் “ஹோம் ஒஃப் ஆர்ட்ஸ்” (HOTA) இலிருந்து தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

5G ஹோட்டல் மூலம் பயணிகள் எவற்றை எதிர்பார்க்கலாம்?

உலகின் முதலாவது 5G ஹோட்டல் அவுஸ்திரேலியாவில்-Oppo 5G Hotel in Australia
ஸ்மார்ட் மிரர் (ஸ்மார்ட் கண்ணாடி) - ஹோட்டலில் காணப்படும் ஸ்மார்ட் மிரர் இல் விருந்தினர்கள் தாம் விரும்பும் அனைத்தையும் கண்ணாடியில் காணலாம். ஸ்மார்ட் சாதனத்தின் மூலம் அதனோடு இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம், அண்மைய செய்திகள், பங்குச் சந்தை நிலவரம், காலை நேர செய்தித்தாள், திரைப்படங்கள் போன்றவற்றை பார்வையிடலாம் என்பதுடன், கண்ணாடி முன்பாக எடுக்கும் செல்பிக்கு உகந்த வெளிச்சத்தையும் அதன் மூலம் பெறலாம்.

உலகின் முதலாவது 5G ஹோட்டல் அவுஸ்திரேலியாவில்-Oppo 5G Hotel in Australia

எங்கும் விளையாட்டு - ஹோட்டலின் 5G கேமிங் சூட் (விளையாட்டு அணிகலன்) மூலம், விருந்தினர்கள் தமது உள்ளங்கையில் ஒரு உயர் வகை கேமிங் கணனியை அனுபவிக்க முடியும். பயனர்கள் கணினியில் உள்ள விளையாட்டுகளையோ அல்லது 5G ஸ்மார்ட்போனை பயன்படுத்தி, விளையாட்டு தளங்களை அணுகி, எங்கிருந்தும் விளையாடவும் முடியும்.

உலகின் முதலாவது 5G ஹோட்டல் அவுஸ்திரேலியாவில்-Oppo 5G Hotel in Australia

ஹேண்ட்ஸ்-ஃப்ரீ விடயங்கள் - ஹோட்டலின் ரெனோ 5G சாதனம் கூகிள் ஹோம் ஹப் (Google Home Hub) உடனும் ஸ்மார்ட்-ஹோம் அம்சங்களுடனும் நேரடியாக இணைக்கப்பட்டிருக்கும். விருந்தினர்கள் தங்கள் குரல் வழியாக மின் விளக்குகளைக் கட்டுப்படுத்தவும், YouTube பார்வையிடவும், தங்களுக்குப் பிடித்த பாடல்களை கேட்கவும், கேள்விகளைக் கேட்கவும் அதன் மூலம் Google இலிருந்து நுட்பமான பதில்களையும் பெற முடியும்.

உலகின் முதலாவது 5G ஹோட்டல் அவுஸ்திரேலியாவில்-Oppo 5G Hotel in Australia

மாய உண்மை (Augmented Reality) - ஹோட்டல் ஆனது, பல்வேறு மாய உண்மை (AR) கொண்ட பல செயலிகளை கொண்டிருக்கும். இதில் ரெனோ 5G மற்றும் மாய அலுமாரி/ துணி மணி அடுக்கும் இதில் அடங்கும். இதன் மூலம் விருந்தினர்கள் ஒவ்வொரு ஆடைகளையும்  தன் முன்னே மாயத் திரையில் கொண்டு வந்து பார்வையிடலாம்.

இடையறாத இலவச பொழுதுபோக்கு - 5G மூலம் உங்களுக்கு பிடித்தமான விடயங்களை பதிவிறக்கி பார்வையிடவும். Netflix மூலம் இடையறாத (Buffer Free) திரைப்படங்களை பார்வையிடலாம் அல்லது ஒரு தேநீர் தயாரிக்கும் இடைவெளியில் உங்களுக்கு பிடித்த தொடர் கதையின் அத்தியாயங்கள் அனைத்தையும் பதிவிறக்கலாம் என்பதோடு, அதை ஹோட்டலின் அகலத்திரை கொண்ட தொலைக்காட்சியில் பார்க்கவும் முடியும்.

உலகின் முதலாவது 5G ஹோட்டல் அவுஸ்திரேலியாவில்-Oppo 5G Hotel in Australia

5G ஹோட்டல் - 40 அடி கப்பல் கொள்கலன் ஆனது பல்வேறு அம்சங்கள் கொண்ட ஹோட்டலாக மாற்றம் - அவுஸ்திரேலியாவின் HOTA வில், ஓகஸ்ட் 01 முதல் ஓகஸ்ட் 30 வரை முற்பதிவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதோடு,  இருவருக்கு இரவொன்றுக்கு அவுஸ்திரேலிய டொலர் 150 இற்கு அதனை முற்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெறப்படும் வருமானம் முழுவதும்உள்ளூர் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளது. விருந்தினர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என்பதோடு, பல்வேறு HOTA நிகழ்வுகளில் ஒன்றில் கலந்து கொள்ளலாம். அல்லது உட்கார்ந்து ஓய்வெடுக்கலாம், நகரத்தின் வான்வெளி காட்சிகளை பார்வையிடலாம்.

நேர்த்தியான கறுப்பு வெளிப்புறம் மற்றும் குறைந்த அளவிலான பொருந்தும் வகையிலான உட்புற அழகுபடுத்தலுடன், 5G ஹோட்டல் கம்பீரமான, தன்னிறைவான அறையாக காட்சியளிக்கிறது. ஆனால் அதன் உள்ளே இருப்பது முற்றிலும் வேறுபட்டதாகும்.

உலகின் முதலாவது 5G ஹோட்டல் அவுஸ்திரேலியாவில்-Oppo 5G Hotel in Australia

ஒரு படுக்கையறையுடன் கூடியா ஆடம்பர தொகுதியானது, 5G cloud Gaming உள்ளிட்ட நவீன தொழில்பத்துடன் கூடியதும், இடையறாத இலவச வீடியோ (buffer-free streaming), பல்வேறு வகையான அதிவேக AR செயலிகள் மற்றும் ஸ்மார்ட் மிரர் உள்ளிட்ட நவீன மேம்பட்ட ஸ்மார்ட் ஹோம் அம்சங்களுடன் அது நிரம்பியுள்ளது.

HOTA வில், 5G ஹோட்டலின் விருந்தினர்கள் Glow விழாவினை கண்டு களிக்கலாம், உழவர் சந்தைகள், பச்சை புல்வெளியில் நடனம் மற்றும் கோல்ட் கோஸ்ட் (Gold Coast) உணவு திருவிழா ஆகியவற்றை அனுபவிக்கலாம். இது அவுஸ்திரேலியாவில் நிகழ்த்தப்படும் மிகப்பாரிய கலை நிகழ்ச்சியாகும்.

OPPO 5G ஹோட்டல்: முன்பதிவு ஓகஸ்ட் 01, 2019 முதல் ஓகஸ்ட் 30, 2019 வரை
கட்டணம் : இரண்டு பேருக்கு ஒரு இரவுக்கு AU$ 150
இடம்: Hota - The Gold Coast

OPPO பற்றி
வளர்ந்து வரும் உலகளாவிய ஸ்மார்ட்போன் நாமமான OPPO, கடந்த பத்து ஆண்டுகளாக நுகர்வோர் நடத்தை மற்றும் அபிலாஷைகளைப் பற்றிய ஆழமான நுண்ணறிவுக்கு ஏற்ப தொழில்நுட்ப முன்னேற்றங்களை மையமாகக் கொண்ட புதுமையான தொழில்நுட்பம், நுணுக்கமான வடிவமைப்பு மற்றும் கெமரா நிபுணத்துவம் ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அசாதாரண அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மொபைல் துறையில் சுழலும் கெமரா, அல்ட்ரா எச்டி அம்சம் மற்றும் 5 x டுவல் கெமரா Zoom தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை,  மொபைல் துறையில் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட பல ஸ்மார்ட் கண்டுபிடிப்புகளில் அறிமுகப்படுத்திய முதல் வர்த்தக நாமம் OPPO ஆகும்.

2016 ஆம் ஆண்டில் செல்பி-மையப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியதிலிருந்து, OPPO புதிய தொழில்நுட்பம் மற்றும் அதன் நுண்ணறிவு பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அதன் எல்லைகளை விரிவுபடுத்துகிறது. அதன் பல மாதிரிகள் மற்றும் வரம்புகள் மூலம் ஏராளமான வடிவமைப்புகள் மூலம் நுகர்வோர் அனைவரையும் அவர்களிடம் உருவாகி வரும் அபிலாஷைகளை பூர்த்தி செய்கிறது.

200 மில்லியனுக்கும் அதிகமான நுகர்வோர் OPPO ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகின்றனர், OPPO இன் வர்த்தகம் 35 நாடுகளையும் பிராந்தியங்களையும் உள்ளடக்கியதாகும். 400,000 இற்கும் மேற்பட்ட காட்சியறைகளைக் கொண்டுள்ளதுடன் உலகளாவிய ரீதியில் 4 ஆராய்ச்சி மையங்களைக் கொண்டுள்ளது. அதன் மூலம் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சிறந்த ஸ்மார்ட்போன் புகைப்பட அனுபவத்தை வழங்கி வருகிறது.


Add new comment

Or log in with...