Friday, March 29, 2024
Home » கூட்டுக் கடற்படையணியுடன் களமிறங்கி கடத்தப்பட்ட ஆறு மீனவர்களை மீட்க அரசு கவனம்

கூட்டுக் கடற்படையணியுடன் களமிறங்கி கடத்தப்பட்ட ஆறு மீனவர்களை மீட்க அரசு கவனம்

by damith
January 29, 2024 6:45 am 0 comment

சோமாலிய கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கை மீனவர்களை மீட்பதற்கு அரசாங்கம் சோமாலிய அரசின் உதவியை நாடியுள்ளது. கடத்தப்பட்ட ஆறு இலங்கை மீனவர்களுடன் ஆழ்கடல் மீன்பிடிப் படகை மீட்பதற்கும் கவனம் செலுத்தியுள்ள அரசாங்கம் இதற்காக அந்நாட்டு கடற்படையின் உதவியை கோரியுள்ளது.

கடத்தப்பட்டுள்ள மீன்பிடிப் படகு தொடர்பில் தகவல் அறியத் தருமாறு பஹ்ரைனில் உள்ள 39 நாடுகளின் கூட்டுக் கடற்படை அணிக்கு இலங்கை கடற்படை வேண்டுகோள் விடுத்துள்ளதாக கடற் படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார். ஆறு மீனவர்களுடன் இலங்கையின் ஆழ் கடல் மீன்பிடிப் படகு கடத்தப்பட்டுள்ளமை தொடர்பில், கடற்தொழில் திணைக்களம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.

இதையடுத்தே மேற்படி இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கடற் படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த (12) லொரென்ஸோ புதா- 4 என்ற பெயருடைய இந்த ஆழ்கடல் மீன் பிடிப்படகு சென்றுள்ளது.

அந்தப் படகையும் ஆறு மீனவர்களையும் சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தப்பட்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT