Home » ஹுத்தி தாக்குதலால் பிரிட்டன் கப்பலில் தீ

ஹுத்தி தாக்குதலால் பிரிட்டன் கப்பலில் தீ

by damith
January 29, 2024 11:53 am 0 comment

ஏதன் வளைகுடாவில் யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கான பிரிட்டனுடன் தொடர்புபட்ட கப்பல் ஒன்று பல மணி நேரம் தீப்பற்றியுள்ளது.

அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் தாக்குதலுக்கு பதிலடியாக மார்லின் லொன்டா என்ற இந்த கப்பலை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பலஸ்தீனத்திற்கு ஆதரவாக செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு பதில் நடவடிக்கையாகவே அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அந்தக் கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

மார்ஷல் தீவுகள் கொடியின் கீழ் செயற்படும் இந்தக் கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டவரப்பட்டு துறைமுகத்தை நோக்கி பாதுகாப்பாக பயணத்தை தொடர்வதாக குறித்த கப்பல் நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

கப்பலில் இருந்த எவருக்கும் மாதிப்பு ஏற்படவில்லை என்று அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதத்திலிருந்து, உலகின் முக்கியமான கடல் வழித்தடங்களில் ஒன்றான செங்கடல் வழியாகப் பயணிக்கும் வணிகக் கப்பல்கள் மீது ஹூத்திக்கள் டஜன் கணக்கான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் செங்கடல் பகுதியில் வணிக கப்பல்களின் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT