பிரெக்சிட்டில் பிரிட்டனுக்கு அமெரிக்கா முழு அதரவு | தினகரன்


பிரெக்சிட்டில் பிரிட்டனுக்கு அமெரிக்கா முழு அதரவு

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒப்பந்தம் ஏதுமின்றி விலகுவதுதான் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் விருப்பம் என்றால் அதனை ஆதரிக்கத் தயார் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

அத்தகைய சூழலில் துறைக்குத் துறை எனும் அடிப்படையில் லண்டனுடன் வர்த்தக உடன்படிக்கை செய்துகொள்வதில் வொஷிங்டனுக்குப் பிரச்சினை ஏதுமில்லை என்று அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்ட்டன் குறிப்பிட்டார்.

இருப்பினும் இந்த ஆண்டு இறுதியில் வெற்றிகரமான பிரெக்சிட்டைக் காணவே ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் விரும்புகிறார் என்பதை அவர் தெளிவுபடுத்தினார். பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் நிர்வாகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுடனான சந்திப்பில் போல்ட்டன் அவ்வாறு கூறினார்.

ஒக்டோபர் 31ஆம் திகதிக்குள் முன்னைய பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு பாராளுமன்ற ஒப்புதலைப் பெறவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டனுக்குக் கெடுவிதித்துள்ளது.


Add new comment

Or log in with...