தென்னாபிரிக்க ரி20 அணிக்கு டி கொக் தலைவராக தேர்வு | தினகரன்


தென்னாபிரிக்க ரி20 அணிக்கு டி கொக் தலைவராக தேர்வு

தென்னாபிரிக்க ரி20 அணிக்கு தலைவராக விக்கெட் காப்பாளர் குயிண்டன் டி கொக் நியமிக்கப்பட்டுள்ளார்.

2019 உலகக் கிண்ண தொடரில் தென்னாபிரிக்க அணி படுதோல்வியடைந்து, தொடரை விட்டு வெளியேறியது. இதனைத் தொடர்ந்து அந்த அணியை சிறந்த அணியாக மாற்ற அணி நிர்வாகம் முயற்சி எடுத்துள்ளது.

அடுத்த ஆண்டு ரி20 உலகக் கிண்ண தொடரும், 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ண தொடரும் நடைபெற உள்ளதால், சிறந்த அணியை கட்டமைக்க அணித்தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

அதன்படி டெஸ்ட் போட்டிக்கான அணியின் தலைவராக பாப் டூ பிளிசிஸ் தொடர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரி20 அணிக்கு விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரரான குயிண்டன் டி கொக் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் அணிக்கு டெம்பா பவுமா உப தலைவராகவும், ரி20 அணிக்கு டஸ்சன் உப தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ரி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் தென்னாபிரிக்க அணி விளையாட உள்ளது. இதில் ரி20 அணிக்கு டி கொக் தலைவராக செயல்படுவார்.


Add new comment

Or log in with...