Saturday, April 20, 2024
Home » ஒக்ஸ்போர்ட் ஜனாதிபதி கிண்ண கால்பந்து போட்டி பெப்ரவரி 03 இல்

ஒக்ஸ்போர்ட் ஜனாதிபதி கிண்ண கால்பந்து போட்டி பெப்ரவரி 03 இல்

by damith
January 29, 2024 4:34 pm 0 comment

கொழும்பு ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி 80ஆவது குழு பழைய மாணவர்கள் ஒழுங்கு செய்துள்ள 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான 14ஆவது ஒக்ஸ்போர்ட் ஜனாதிபதி வெற்றிக்கிண்ண கால்பந்து போட்டி எதிர்வரும் பெப்ரவரி 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

ஆரம்ப சுற்றுப் போட்டிகள் சுகததாச மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில் தொடரின் இறுதிப் போட்டி மார்ச் 10ஆம் திகதி கொழும்பு, குதிரைப்பந்தய திடல் மைதானத்தில் நடத்த ஏற்பாடாகியுள்ளது.

இந்த போட்டி தொடர்பில் விளக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு கால்பந்து சம்மேளனத்தில் அண்மையில் நடைபெற்றதோடு பிரதான அனுசரணையாளர் ஒக்ஸ்போர்ட் குரூப் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் இம்தியாஸ் பாரூக் மற்றும் ஹிபாஸ் பாரூக் ஆகியோர் அனுசரணையை ஹமீட் அல் ஹுசைனி கல்லூரியின் அதிபர் எம்.ஆர்.எம். ரிஸ்கியிடம் கையளித்தனர்.

இப்போட்டியில் ஆனந்தா கல்லூரி, டி மசெனோட் கல்லூரி, அலிகார் மத்திய கல்லூரி, புனித பெனடிக்ட் கல்லூரி, புனித மேரீஸ் கல்லூரி, மாரி ஸ்டெல்லா கல்லூரி, ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி, பதுரியா மத்திய கல்லூரி, புனித ஜோசப் கல்லூரி, புனித பீட்டர் கல்லூரி, கேட்வே கல்லூரி, வெஸ்லி கல்லூரி, புனித தோமஸ் கல்லூரி, றோயல் கல்லூரி, அல் முபாரக் தேசிய பாடசாலை, தாருஸ்ஸலாம் கல்லூரி, இசிபத்தான கல்லூரி, தர்ம தூதா கல்லூரி, அல் ஹிலால் மத்திய கல்லூரி மற்றும் அல் ஹுமைசரா கல்லூரி ஆகியன இடம்பெற்றுள்ளன.

ருஸைக் பாரூக்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT