முறுகலுக்கு மத்தியில் மட்ரிட் அணிக்கு கோல் பெற்றார் பேல் | தினகரன்


முறுகலுக்கு மத்தியில் மட்ரிட் அணிக்கு கோல் பெற்றார் பேல்

நட்புமுறை ஆட்டமொன்றில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் ரியல் மட்ரிட் அணிக்காக களமிறங்கிய கேரத் பேல் கோல் போட்டபோதும் அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை.

சீன அணி ஒன்றிற்கு பேல் செல்வதற்கு ரியல் மட்ரிட் முட்டுக்கட்டையாக இருந்தது.

இதனால் பேலுக்கும் ரியல் மட்ரிட் அணிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 85 மில்லியன் பவுண்டுக்கு மட்ரிட் அணிக்கு வந்த பேலுக்கு இன்னும் மூன்றாண்டு ஒப்பந்தம் உள்ளது.

இந்நிலையில், அவர் மட்ரிட் அணிக்காக நேற்று முன்தினம் மீண்டும் விளையாடியுள்ளார்.

முன்னதாக, மட்ரிட் நிர்வாகி ஸினடின் ஸிடான் மட்ரிட்டில் இருந்து பேல் வெளியேறும் காலம் கூடி வந்துவிட்டதாகக் கடந்த மாதம் கூறியது குறிப்பிடத்தக்கது. ரோமா அணிக்கு எதிரான பருவத்திற்கு முந்திய நட்புமுறை ஆட்டம் 2–2 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டது.

இப்போட்டியில் கேரத் பேல் மாற்று ஆட்டக்காரராகப் பிற்பாதி ஆட்டத்தில் களமிறக்கப்பட்டார். வெற்றியாளரை நிர்ணயிக்க நடத்தப்பட்ட பெனால்டி ஷூட்அவுட் முறையில், பேல் கோல் போட்டபோதும் அவ்வணியின் மார்சிலோ கோல் போடத் தவறியதால், ரோமா 5–4 என வெற்றி பெற்றது.


Add new comment

Or log in with...