முதிரைக் குற்றிகளை கடத்தி வந்த வாகனம் விபத்து | தினகரன்


முதிரைக் குற்றிகளை கடத்தி வந்த வாகனம் விபத்து

வவுனியா, சாந்தசோலை சந்திக்கு அருகில் முதிரை மரக் குற்றிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த கப் ரக வாகனமொன்று விபத்திற்குள்ளானதில், முதிரைக் குற்றிகளை கடத்தியவர்கள் தப்பியோடியிள்ளனர். 

இன்று (15) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஓமந்தை பகுதியிலிருந்து வவுனியா நோக்கி 10 முதிரைக் குற்றிகளை கடத்திச் சென்ற கப் ரக வாகனம், சாந்தசோலை சந்தியில் வாகன அச்சு உடைந்து விபத்திற்குள்ளானது.

இதனையடுத்து, முதிரைக் குற்றிகளை அவ்விடத்தில் இறக்கிவிட்டு வாகனத்தை கட்டி இழுத்துச்செல்ல முற்பட்ட நிலையில் அதுவும் உடனடியாக சரி வராமையால் மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் மரங்களையும்,  வாகனத்தையும் அவ்விடத்தில் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.  

யாருமற்ற நிலையில் வாகனம் நின்றமையால் சந்தேகமைடந்த அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கினர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த  வவுனியா பொலிசார், விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு,  வன இலாகா பிரிவினருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

குறித்த இடத்திற்கு வருகை தந்த வன இலாகா பிரிவினர்,  மரங்களையும் வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

(வவுனியா விசேட நிருபர்–  கே. வசந்தரூபன்)

 


Add new comment

Or log in with...