7 பெண் தொழிலாளர்கள் மீது குளவிக் கொட்டு | தினகரன்

7 பெண் தொழிலாளர்கள் மீது குளவிக் கொட்டு

பொகவந்தலாவை, பொகவான தோட்ட பகுதியில் தேயிலைக் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த ஏழு பெண் தொழிலாளர்கள், குளவிக்கொட்டுக்கு இலக்கானதை தொடர்ந்து, பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (15) குறித்த பெண் தொழிலாளர்கள் தேயிலை மலையில் தேயிலைக் கொழுந்து பறித்துக்கொண்டிருந்தனர். அவ்வேளையில் தேயிலை மரத்துக்கு அடியில் இருந்த குளவிக்கூடு உடைந்த நிலையில், அதிலிருந்த  குளவிகள் கலைந்து வந்து குறித்த  தொழிலாளர்களை கொட்டியுள்ளதாக, பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

(ஹற்றன் சுழற்சி நிருபர் – ஜி.கே. கிருஷாந்தன்)    

 

 


Add new comment

Or log in with...