இலவச பாட நூல்கள் பகிர்ந்தளிக்கும் செயற்பாடு நாளை 16 முதல் ஆரம்பம் | தினகரன்


இலவச பாட நூல்கள் பகிர்ந்தளிக்கும் செயற்பாடு நாளை 16 முதல் ஆரம்பம்

அரசாங்கப் பாடசாலை மாணவர்களுக்கு 2020ஆம் ஆண்டுக்கான இலவச பாடப் புத்தகங்களை பகிர்ந்தளிக்கும் செயற்பாடு நாளை 16ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.  

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் தலைமையில் ஹோமாகம பிட்டிபனாவில் அமைந்துள்ள கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் இதன் ஆரம்ப நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

 2019ஆம் ஆண்டின் இறுதித் தவணைக்கான பாடசாலை விடுமுறை ஆரம்பிப்பதற்கு முன்னர் 2020ஆம் ஆண்டுக்கான பாடப் புத்தகங்களைப் பெற்றுக்கொடுக்குமாறு கல்வி வெளியீட்டுத் திணைக்களத்துக்கு கல்வி அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.


Add new comment

Or log in with...