ஐந்து பிள்ளைகளுடன் தாய் மாயம் | தினகரன்


ஐந்து பிள்ளைகளுடன் தாய் மாயம்

 

யாழில் 5 பிள்ளைகளுடன் தாய் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்.நல்லூர் அரசடி வீதிப் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் திவானி (36) எனும் பெண்ணும் அவரது குழந்தைகளான பிரதீபன் கஜநிதன் (11), பவநிதன் (09), அருள்நிதன் (08), இரட்டைக் குழந்தைகளான யதுசியா, யஸ்ரிகா (02) ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.

இவர்களைக் காணவில்லையென உறவினர்களினால், கடந்த செவ்வாய்க்கிழமை (09) யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடும்ப தகராறின் காரணமாகவே, தாயார் தனது 5 பிள்ளைகளுடன் காணாமல் போயுள்ளதாகவும் உறவினர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யபப்பட்ட முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

இந்த முறைப்பாட்டின் பிரகாரம், யாழ்ப்பாணம் பொலஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)

 


Add new comment

Or log in with...