சீனாவில் தொடரும் புயல்: உயிரிழப்பு 44ஆக உயர்வு | தினகரன்


சீனாவில் தொடரும் புயல்: உயிரிழப்பு 44ஆக உயர்வு

சீனாவின் கிழக்குப் பகுதியில் லெகிமா எனும் புயல் தாக்கி வரும் வேளையில் புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு கடலோரப் பகுதியில் புயல் தொடர்ந்து வீசுவதாகவும் இதனால் பெரும் சேதம் ஏற்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சீனாவின் சின்ஜியாங் மாநிலத்தில் சனிக்கிழமை வீசத் தொடங்கிய புயல் காற்று தொடர்ந்து வீசுவதாகவும் மணிக்கு 187 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் புயல் காற்றினால் பெரும் சேதம் ஏற்படும் என்றும் இதனால் சீனாவுக்கு பல பில்லியன் டொலர் இழப்பு ஏற்படக்கூடும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். சீனாவில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஓர் அணைக்கட்டு உடைந்ததில் பலர் மரணம் அடைந்ததாக பேரிடர் நிவாரண அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறினார்.


Add new comment

Or log in with...