பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஹத்துருசிங்கவுக்கு வலை வீச்சு | தினகரன்


பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஹத்துருசிங்கவுக்கு வலை வீச்சு

இலங்கை கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சந்திக்க ஹத்துருசிங்கவை பங்களாதேஷ் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஹித்துருசிங்க அவர் வகித்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இலங்கை அணியின் செயல்பாடு தொடர்ந்து மோசமாக இருந்த நிலையிலேயே அவர் நீக்கப்பட்டார்.

அதன்பின்னர் இடைக்கால பயிற்சியாளராக ருமேஷ் ரத்நாயக்கவை நியமித்தது இலங்கைக் கிரிக்கெட் சபை.

இந்நிலையில் ஹத்துருசிங்கவை மீண்டும் பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளராக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை முயற்சிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது பங்களாதேஷ் அணியும் சரியான பயிற்சியாளர் ஒருவர் இல்லாமல் சற்று திண்டாடி வருகிறது.

ஏற்கனவே பங்களாதேஷ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஹத்துருசிங்க 2017ஆம் ஆண்டு இறுதியில் இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...