பாராளுமன்ற தெரிவுக்குழுவில் மேலும் ஐவர் | தினகரன்

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் மேலும் ஐவர்

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் மேலும் ஐவர்-5 More Appointed to Parliament Selection Committee

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு மேலும் 5 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.

குறித்த குழுவில் அமைச்சர்களான ஜோன் அமரதுங்க, காமினி ஜயவிக்ரம பெரேரா, சஜித் பிரேமதாச, தலதா அத்துகோரள ஆகியோரும், பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் சபாநாயகர் தலைமையிலான பாராளுமன்ற தெரிவுக் குழுவில் 17 உறுப்பினர்கள் தற்போது அங்கம் வகிக்கின்றனர்.

ஏற்கனவே பாராளுமன்ற தெரிவுக்குழுவில், ஐக்கிய தேசிய முன்னணி சார்பில், லக்‌ஷ்மன் கிரியெல்ல, ரஊப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், மனோ கணேசன், பாட்டலி சம்பிக ரணவக்க ஆகியோரும்,

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பிரநிதித்துவப்படுத்தி, நிமல் சிறிபால டி சில்வா, தினேஷ் குணவர்தன, மஹிந்த சமரசிங்க, எஸ் பி திசாநாயக்க, விமல் வீரவங்ச ஆகியோரும்,

தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும், மக்கள் விடுதலை முன்னணி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோரும் அங்கத்துவம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...