Home » ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை கொண்டாடிய தாய்வானிலுள்ள இந்திய சமூகம்

ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை கொண்டாடிய தாய்வானிலுள்ள இந்திய சமூகம்

by Rizwan Segu Mohideen
January 25, 2024 2:04 pm 0 comment

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு தாய்வானில் உள்ள இந்திய சமூகம் மகிழ்ச்சியான கொண்டாட்டத்தில் இணைந்து கொண்டன..

தாய்வானில் உள்ள துடிப்பான இந்திய சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு தனித்துவமான நிகழ்வுகளும் அவர்களின் அர்ப்பணிப்பு முயற்சியை எடுத்துக் காட்டின.

கலந்து கொண்டவர்கள், கீர்த்தனை மற்றும் பஜனையில் ஈடுபட்டனர்.இதன் ஊடாக மரியாதை மற்றும் கலாச்சார ஒற்றுமைக்கான சூழல் உருவாக்கப்பட்டு ஆன்மீக உற்சாகத்தால் இந்த நிகழ்வுகள் சிறப்புப் பெற்றது. இந்த நிகழ்வுகள் தாய்வானில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களால் பராமரிக்கப்படும் ஆழமான வேரூன்றிய கலாச்சார உறவுகளுக்கு ஒரு சான்றாக அமைந்ததோடு கூட்டு மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவும் இந்த நிகழ்வுகள் அமைந்தன.

தாய்வானில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்கள் தாய்நாட்டுடன் தொடர்ந்து இணைந்திருக்கவும், பல்வேறு இந்திய கொண்டாட்டங்களில் முழு மனதுடன் ஈடுபடவும் அவர்களின் அசைக்க முடியாத முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் திறப்பை ஒட்டி பிரான் பிரதிஸ்டா என்ற பெயரில் நடைபெறும் சடங்கில், பங்கேற்ற பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலையை கருவறையில் நிறுவி ஆரத்தி வழங்க உள்ளார். கோயில் திறப்பை ஒட்டி அதிகாலை முதல் சடங்குகளும், பூஜைகளும் நடைபெற்றன.

கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி பிரமாண்ட ராமர் கோயில் மலர்களாலும், சிறப்பு விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டன

பிரமாண்டமான சிலை நிறுவும் விழாவைக் குறிக்கும் வகையில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள கோயில்களிலும் சிறப்பு விழாக்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. புதிய ராமர் சிலை, கோவில் கருவறைக்குள் வைக்கப்பட்டது. சிலை 51 அங்குல உயரமும் 1.5 டன் எடையும் கொண்டது. அதே கல்லில் இருந்து வடிவமைக்கப்பட்ட தாமரையின் மீது ஐந்து வயது குழந்தையாக ராமர் நிற்பது போல் சிலை சித்தரிக்கிறது. ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு நடைபெற்ற சடங்குகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றிருந்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT