வாக்காளர் இடாப்பு திருத்தம் இன்றுடன் நிறைவு | தினகரன்

வாக்காளர் இடாப்பு திருத்தம் இன்றுடன் நிறைவு

வாக்காளர் இடாப்பு திருத்தம் இன்றுடன் நிறைவு-Voters List Amendment Closed Today

 

2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு தொடர்பான திருத்தங்களை முன்வைப்பதற்கான கால எல்லை இன்றுடன் (06) நிறைவடைகின்றது.

அதற்கமைய, தங்களது வாக்காளர் பதிவு தொடர்பில் திருத்தம் ஏதேனும் காணப்படின், இது வரை அது தொடர்பில் அறிவிக்காத வாக்காளர்கள், இன்றையதினம் (06) மாவட்ட தேர்தல் காரியாலங்களுக்குச் சென்று, அது தொடர்பிலான தங்களது மேன்முறையீடுகளை அல்லது எதிர்ப்பினை கையளிக்க முடியும் என, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார்.

இன்றுடன், இவ்வருடத்திற்கான வாக்காளர் இடாப்பு தொடர்பிலான எந்தவொரு திருத்தங்களும் ஏற்கப்படாது என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

கிடைக்கப்பெறும் அனைத்து மேன்முறையீடுகள் மற்றும் எதிர்ப்புகள் தொடர்பில், நாளைய தினம் (07) முதல், பிரதேச செயலகங்கள் ரீதியாக பரிசீலனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

அதன் அடிப்படையில், ஒக்டோபர் மாதத்தின் முதல் இரு வாரங்களுக்குள், இவ்வருடத்திற்கான வாக்காளர் இடாப்பு முழுமைப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அவர் இதன்போது தெரிவித்தார்.

வாக்காளர் பெயர் விபரம்


Add new comment

Or log in with...