காஷ்மீர் எல்லையில் போர் பதற்றம் | தினகரன்


காஷ்மீர் எல்லையில் போர் பதற்றம்

வான் பகுதி தீவிரமாக கண்காணிப்பு மீண்டும் கட்டுப்பாடுகள் அமுல்

காஷ்மீரின் லடாக் யூனியன் பிர தேசத்தின் எல்லை அருகே போர் விமானங்களையும் ஆயுதங்களை யும் பாகிஸ்தான் குவித்து வருகிறது. இதனால் காஷ்மீர் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வான் எல்லை தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இந்திய விமானப் படை, ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. காஷ்மீரில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

காஷ்மீருக்கான சிறப்பு அந் தஸ்து ரத்து செய்யப்பட்டு 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பாகிஸ்தானுக்கான இந்திய தூதரை அந்த நாடு நேற்று முன்தினம் வெளியேற்றியது. பகுதியளவு வான் எல்லையை மூடிவிட் டது. இரு நாடுகளுக்கு இடையிலான சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, டெல்லி- லாகூர் பேருந்து சேவையையும் பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் தலை யிடும்படி ஐ.நா. சபை சர்வதேச நாடுகளிடம் பாகிஸ்தான் முறை யிட்டு வருகிறது. ஆனால் ஐ.நா. சபையும், அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட வல்லரசு நாடுகளும் பாகிஸ்தானின் கோரிக்கையை புறக்கணித்துள்ளன.

இந்தச் சூழ்நிலையில் காஷ் மீரின் லடாக் யூனியன் பிரதேசத்தின் எல்லை அருகே ஸ்கர்து விமானப் படை தளத்தில் போர் விமானங்களையும் ஆயுதங்களை யும் பாகிஸ்தான் குவித்து வருகி றது. பாகிஸ்தானுக்கு பல ஆண்டு களுக்கு முன்னர் அமெரிக்கா வழங்கிய ‘சி-130’ ரக போக்கு வரத்து விமானங்கள் மூலம் தள வாடங்களைக் கொண்டு வந்து ஸ்கர்து விமானப் படை தளத்தில் குவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த தளவாடங்கள் வான்வழி தாக்குதல் நடத்துவதற்கு பயன்படக்கூடியவை. சீனத் தயாரிப்பான ஜே.எப்17 ரக விமானங்களும் ஸ்கர்து விமான படைத் தளத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்தி எல்லையில் போர் பயிற்சி நடத்த பாகிஸ்தான் விமானப்படை திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை இந்திய உளவுத் துறை யினரும் விமானப்படை அதிகாரி களும் மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். எந்த சவாலையும் சந்திக்கும் வகையில் இந்திய விமானப் படை வீரர்களும் ராணுவ வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் மட்டுமன்றி, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் வான் எல்லைகள் மற்றும் கடல் எல்லைகளும் மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகின்றன.

பக்ரீத் கொண்டாட்டம்

பக்ரீத் பண்டிகையை ஒட்டி கடந்த 9-ம் திகதி முதல் காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இறைச்சி, பேக்கரி, மளிகை, சந்தைகள் வழக்கம்போல செயல்பட்டன. இயல்பு நிலை திரும்பியதால் காஷ்மீர் முழுவதும் நேற்று முன்தினம் பக்ரீத் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. மசூதிகளில் தொழுகை நடைபெற்றது. எதிர்வரும் 15-ம் திகதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை சீர்குலைக்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி செய்யக்கூடும் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளது. எனவே சுதந்திர தினம் வரை காஷ்மீரில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

பக்ரீத் பண்டிகை நிறைவடைந்துள்ள நிலையில் காஷ்மீரின் சில பகுதிகளில் நேற்று முன்தினம் மீண்டும் கட்டுப்பாடுகள் அமுல் செய்யப்பட்டன. பதற்றமான பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. வரும் சுதந்திர தினம் வரை காஷ்மீரில் கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Add new comment

Or log in with...