வறிய மக்களின் வாழ்வையும் வலியையும் அறிந்தவர் சஜித் | தினகரன்


வறிய மக்களின் வாழ்வையும் வலியையும் அறிந்தவர் சஜித்

நாட்டை ஆட்சிசெய்யக் கூடிய புதிய பரம்பரையிடம் ஒப்படைக்க வேண்டும்

வறிய மக்களின் வாழ்வையும் அவர்களது வலியையும் வேதனையையும் அறிந்த ஒருவரே சஜித் பிரேமதாச. இவர் ஜனாதிபதியாக வருவதன் மூலம் சிறந்த ஒரு நாட்டை கட்டியெழுப்ப முடியுமென டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

நாட்டை ஆட்சிசெய்யக் கூடிய புதிய பரம்பரையொன்றை உருவாக்க வேண்டிய அவசியம் இன்று நமக்கிருக்கிறது. சகல இன மக்களையும் அரவணைத்து அனைத்து பகுதியையும் ஒருமுகப்படுத்தி இந்த நாட்டை ஆளக் கூடிய புதிய பரம்பரையை உருவாக்க வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாநகர சபையின் பொது நூலகத்தில் முதல் தடவையாக நிர்மாணிக்கப்பட்டுள்ள டிஜிட்டல் நூலகத்தை நேற்று

திறந்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

சகல இன மக்களையும் அரவணைத்து நாட்டை கொண்டு செல்லக்கூடிய ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவே உள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியினால் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்று இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்காவிட்டாலும் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பெயர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் வறிய மக்களின் வாழ்வையும் அவர்களின் வலியையும் வேதனையையும் அறிந்த ஒருவரே சஜித் பிரேமதாசவாகும்.

இவர் ஜனாதிபதியாக வருவதன் மூலம் சிறந்த ஒரு நாட்டை கட்டியெழுப்ப முடியும்.

மட்டக்களப்பு விசேட ,

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்கள்


Add new comment

Or log in with...