இலங்கை கிரிக்கெட் அணிகளின் போட்டி அட்டவணை | தினகரன்


இலங்கை கிரிக்கெட் அணிகளின் போட்டி அட்டவணை

இலங்கை கிரிக்கெட் அணிகளின் போட்டி அட்டவணை-Sri Lanka Cricket Time Table

பங்களாதேஷ் செல்லும் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி (Emerging)மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும், இரண்டு நாள் தொடரிலும் பங்கேற்கவுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16) அவ்வணி பங்களாதேஷுக்கு புறப்படவுள்ளது.

இப்போட்டித் தொடரில் பங்குபற்றும் வீரர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

போட்டி அட்டவணை, மைதானம்:
ஓகஸ்ட் 18 - 1 ஆவது ஒருநாள் - சவார்
ஓகஸ்ட் 21 - 2 ஆவது ஒருநாள் - சவார்
ஓகஸ்ட் 24 - 3 ஆவது ஒருநாள் - குல்னா
ஓகஸ்ட் 27 - 30 வரை - 1 ஆவது நான்கு நாள் போட்டி - குல்னா
செப். 03 - 06 வரை - 2 ஆவது நான்கு நாள் போட்டி - கொக்ஸ் பஸார்

இதேவேளை, இலங்கை வந்துள்ள நியூசிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட்  போட்டி நாளைய தினம் (14) ஆரம்பமாகவுள்ளது.

இத்தொடரில் இரு அணிகளும் 2 டெஸ்ட் மற்றும் 3 ரி20 போட்டிகளில் விளையாடவுள்ளன.

போட்டி அட்டவணை, மைதானம்:
ஓகஸ்ட் 14 - 18 : 1 ஆவது டெஸ்ட் - காலி
ஓகஸ்ட் 22 - 26 : 2 ஆவது டெஸ்ட் - பி. சரவணமுத்து
செப். 01 : 1 ஆவது ரி20 - பல்லேகலை
செப். 03 : 2 ஆவது ரி20 - பல்லேகலை
செப். 06 : 3 ஆவது ரி20 - பல்லேகலை


Add new comment

Or log in with...