​கங்குலியின் சாதனையை முறியடித்த விராட் கோலி | தினகரன்


​கங்குலியின் சாதனையை முறியடித்த விராட் கோலி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் 42ஆவது சதத்தை விராட் கோலி கடந்துள்ளார்.

311 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சவுரவ் கங்குலி, 11,363 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால், கோலி 238 ஒருநாள் போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார். 37.1 ஓவருக்கு இந்தியா 191 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கோலி 112 ரன்கள் குவித்தார். அதில், 10 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸும் அடங்கும்.

"விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் இன்னொரு மாஸ்டர் க்ளாஸ், என்ன ஒரு சிறப்பான வீரர்," என இந்தியன் கேப்டனை கங்குலி ட்விட்டரில் வாழ்த்தினார்.

30 வயதான விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் 49ஆவது சதத்தை கடக்க இன்னும் 7 சதங்கள் எடுக்க வேண்டியுள்ளது. முன்னதாக, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில், அதிக ரன்கள் எடுத்த பாகிஸ்தானின் ஜாவேத் மியாண்டாட்டை கடந்த இந்திய கேப்டன் 26 வயதான சாதனையை முறியடித்தார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பேட் செய்ய வந்தபோது கோலி 19 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஜேசன் ஹோல்டர் வீசிய ஐந்தாவது ஓவரில் மியாண்டாட்டின் 1930 ரன்களை அவர் ஒரு ரன்னில் முறியடித்தார்.

இது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கோலியின் 34ஆவது ஒருநாள் போட்டியாகும். அதே நேரத்தில் மியாண்டட் 64 போட்டிகளில் ஆடி இந்த ரன்களைக் குவித்தார்.

2009 ஆம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த சம்பியன்ஸ் டிராபியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக கோலி தனது முதல் ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 79 ரன்களை எடுத்தார். அவரின் முதல் சதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2011ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் குவித்தார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கோலியின் ஆதிக்கம் செலுத்தி ஜூலை 2017 முதல் அக்டோபர் 2018 வரை அவர்களுக்கு எதிராக நான்கு ஒன்றுக்கு பின் ஒருன்றாக சதங்களை அடித்தார்.


Add new comment

Or log in with...