எழுதுமட்டுவாழிலுள்ள வீடொன்றில் கொள்ளை | தினகரன்


எழுதுமட்டுவாழிலுள்ள வீடொன்றில் கொள்ளை

யாழ். தென்மராட்சி எழுதுமட்டுவாழ் பகுதியிலுள்ள வீடொன்றில் 35 பவுண் தங்கநகைகள் மற்றும் 10 இலட்சம் ரூபா பணம் கொள்ளை போயுள்ளது.

குறித்த வீட்டுக்கு முகங்களை மறைத்தவாறு நுழைந்த கொள்ளையர்கள்,  வீட்டிலிருந்தவர்களைத் தாக்கிவிட்டு,கனடாவிலிருந்து வந்திருந்த பெண் ஒருவரின் 35 பவுண் நகைகளையும்,  10 இலட்சம் ரூபா பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையிட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் (11) இடம்பெற்ற இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர்,கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.  

கனடாவிலிருந்து வந்த பெண் நேற்று முன்தினம்எழுதுமட்டுவாழிலுள்ள  உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்

அன்றிரவு இரவு முகங்களை துணியால் மறைத்து வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள் நுழைந்த கொள்ளையர்கள்,வீட்டில் இருந்த முதியவர்களை கடுமையாக தாக்கிவிட்டு நகை, பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 (யாழ்.விசேட நிருபர் - மயூரப்பிரியன்)

 


Add new comment

Or log in with...