மன்னாரில் 451.1 கி.கி. பீடி இலைகள் மீட்பு | தினகரன்


மன்னாரில் 451.1 கி.கி. பீடி இலைகள் மீட்பு

மன்னார் மற்றும் தலைமன்னார் பகுதிகளில் 451.1 கிலோகிராம் பீடி இலைகள்  கடற்படையினரால்  இன்று (13)  மீட்கப்பட்டுள்ளன.  

மன்னார், ஒலுதுடுவை கடற்கரை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட  சோதனை நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான இரண்டு பொதிகள் காணப்பட்டன. இப்பொதிகளை சோதனைக்கு உட்படுத்தியபோது 138.1 நிறை கொண்ட பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.

அத்தோடு, தலைமன்னாரில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது, நான்கு பொதிகளில் அடைக்கப்பட்ட 313 கிலோகிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மீட்கப்பட்டுள்ள பீடி இலைகள், யாழ். சுங்கத் திணைக்களத்தினரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.


Add new comment

Or log in with...