எரிபொருள் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு, கொள்ளை; ஒருவர் பலி | தினகரன்


எரிபொருள் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு, கொள்ளை; ஒருவர் பலி

எரிபொருள் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு, கொள்ளை; ஒருவர் பலி-Petrol Shed Shooting-One Killed

பொல்கஹவெல, கஹவத்தேஎல பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் அதன் ஊழியர் சுட்டுக் கொல்லப்பட்டு, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இன்று (11) அதிகாலை 12.15 மணியளவில், ஜக்கெட் மற்றும் ஹெல்மெட் அணிந்து வந்த இருவரால், இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இச்சம்வபத்தில் அரநாயக்க, தெய்யங்வல, ஹீன்ஹேனவில் வசிக்கும் 27 வயதான போதிபக்ஷ குமாரசிங்க என்பவர் மரணமடைந்துள்ளார்.

கொள்ளையிடப்பட்ட பணம் தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பதோடு, சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் பொல்கஹவெல பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...