அன்னை மரியாளின் விண்ணேற்பு விழா | தினகரன்


அன்னை மரியாளின் விண்ணேற்பு விழா

அன்னை மரி யாளின் விண்ணேற்பு விழாவை கத்தோலிக்கத் திருச்சபை எதிர்வரும் 15ஆம் திகதி கொண்டாடுகிறது.

இவ் விழாவே மடுத் திருப்பதியின் ஆவணித் திருவிழாவாக கொண்டாடப் படுகிறது.

எருசலேமில் ‘ அன்னை மரியாள் துயில் கொள்ளும் ஆலயம்’ Church Of Dormition இருக்கின்றது. இந்த ஆலயத்தின் நடுவில் அன்னை மரியாள் உறங்குவது போன்றதொரு சுரூபம் இருக்கின்றது.  

அந்த அறையில் சுவரோவியங்கள் சில இருக்கின்றன. அதில் ஒன்றில் ஆண்டவர் இயேசு  அன்னையைக் கையிலேந்தி அவரை மோட்சத்துக்கு எடுத்துச் செல்வது போன்று ஒன்றும் உள்ளது.  நம் மாதா பாலனை ஏந்தி நிற்கும் காட்சியைத்தான் கண்டுள்ளோம். ஆனால் இதிலோ இயேசு தம் அன்னையைத் தாங்கியவராக காணப்படுகின்றார். 

அன்னை மரியாள் மோட்சத்திற்கு ஆரோகணமானார் என்பது திருச்சபையின் இரண்டாயிரம் ஆண்டு பாரம்பரியமாகும்.

மனுவுரு எடுத்த இறைவனின் தாயாராது உடல் மண்ணுக்கு இரையாகுமா? எனவே வானவர் புடைசூழ அவர் விண்ணேகினார் என்பது திருச்சபையின் வழுவா வரம் கொண்ட சத்தியப் பிரகடனமாகும். 

மனித குலத்தை இயேசு மீட்டது அவர் தம் உடலில் தாங்கிய பாடுகளும், மரணமும், உயிர்ப்பினாலுமே ஒரு வேளை அவர் நம்மைப் போன்ற உடல் கொண்டவராயிராவிட்டால் அந்த பாடுகளினால் அர்த்தமே இல்லை. 

இரத்தமும் சதையும் கொண்டவராய் அவர் தம் உடலில் துன்பங்களை ஏற்றார். அந்த உடலை அவருக்கு முற்றுமுழுவதுமாகக் கொடுத்தது மரியாளே.

இதற்காகத்தான் அவர் சென்ம பாவமின்றி உற்பவமானார். மரணம் என்பது பாவத்தின் சம்பளம் என்று நாம் அறிந்திருக்கின்றோம். அவருடைய மரித்த உடல் மண்ணிக்கு இரையாகாது என நாம் நம்பலாம்.  

பாரம்பரியத்தின்படி அன்னை மரியாள் மரித்த வேளையில் பதினொரு சீடர்களும் தெய்வா தீனமாக எருசலேமில் இருந்தார்கள். வழமைபோல் தோமையார் அவர்களோடு இருக்க வில்லை.

ஆனால் மூன்றாம் நாள் அவர் எருசலேம் வந்தார். சீடர்கள் எல்லாரும் கல்லறைக்குப் போயிருந்த போது அது காலியாக இருக்கக் கண்டனர்.  

அன்னை விண்ணுலகு எடுத்துக் கொள்ளப்பட்டார் . இந்த நம்பிக்கையே இருபது நூற்றாண்டுகளாக கத்தோலிக்கர் மட்டுமல்லாது அனைவரதும் நம்பிக்கையாகியுள்ளது. (ஸ)   


Add new comment

Or log in with...