ஏமாற்று வியாபாரத்திலிருந்து பாதுகாப்பு பெறுவது அவசியம் | தினகரன்


ஏமாற்று வியாபாரத்திலிருந்து பாதுகாப்பு பெறுவது அவசியம்

நுகர்வோர் மத்தியில் எவ்வேளையிலும் எச்சரிக்ைக தேவை

நவீன வணிகம் இன்றைய சமூகத்தின் ஒரு பகுதியாகும். ஓவ்வொரு நிறுவனமும் மக்கள் மீது ஒரு சமூகபொருளாதார தாக்கத்தினை ஏற்படுகின்றது. நுகர்வோர் சமூகத்தின் ஒரு முக்கிய அங்கமென கொள்ள முடியும். நுகர்வோரை நேர்மையற்ற வர்த்தக நடைமுறையிலிருந்து

பாதுகாப்பதற்கும், அவர்கள் தங்களது வருமானத்தின் உச்ச பயனைப் பெறக் கூடிய வகையில் செலவு செய்வதற்கான யோசனையை வழங்குவதற்கும் நுகர்வோர் விழிப்புணர்வு என்பது அவசியமாகின்றது.

அனைத்துப் பிரிவினரது எதிர்பார்ப்பும் தாம் செலுத்திய விலைக்கு தகுந்த பயனை பெற்றுக் கொள்ளக் கூடியவறான பொருட்கள் சேவைகளை கொள்வனவு செய்வதாகும். இது நுகர்வோரின் அடிப்படை உரிமை ஆகும்.

நுகர்வோர் விழிப்புணர்வு என்பது நாம் பயன்படுத்தும் பொருட்கள் சேவைகள் குறித்து தமக்கான உரிமைகளை அறிந்திருத்தல் ஆகும். நுகர்வோர் நலனை மறந்து அதிக விலை, குறைவான எடையுடன் பொருட்களை விற்பனை செய்தல்,பொருட்களில் கலப்படம்,பொதுமக்களை தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் மூலமான விற்பனை போன்றவற்றால் அதிக இலாபம் ஈட்டுதல் ஆகியன இன்று சாதாரணமாக நடைபெறுகின்றன.

இவற்றில் இருந்து நுகர்வோர் தம்மை பாதுகாத்துக் கொள்வது அவசியமாகும்.

அனைத்துப் பிரிவினரது எதிர்பார்ப்பும் தாம் செலுத்திய விலைக்கு தகுந்த பயனை பெற்றுக் கொள்ளக் கூடியவாறான பொருட்கள் சேவைகளை கொள்வனவு செய்வதாகும். இதுவே நுகர்வோரின் அடிப்படை உரிமையும் ஆகும். வியாபார ஆதிக்கம் கொண்ட பல்தேசிய கூட்டு வியாபார நிறுவனங்கள் அதிக விலையில் தரம் குறைந்த பொருட்களை மக்களிடையே உட்புகுத்த விளைகின்றன. இதன் மூலம் அதிக இலாபம் ஈட்டுதலையே முதல்நோக்கமாக கொண்டு அவை செயற்படுகின்றன.

இவற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவது அத்தியாவசியமாகின்றது. இலாபம் ஈட்டுதலையே முதல்நோக்கமாக கொண்டிருப்பதனால் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் உற்பத்திகள் பற்றி கவனம் செலுத்துவது அவசியம்.

அவ்வாறான பொருட்கள் சமூகத்திற்கு அச்சுறுத்தலாகவே அமையும் போதிலும் அந்நிறுவனங்கள் அவற்றை நுகர்வோருக்கு வழங்குகின்றன.எனவே தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மீதான நுகர்விலிருந்து பாதுகாப்பு பெறும் கட்டுப்பாடு அவசியமாகின்றது.

ஆரோக்கியமான சமுதாயம் ஒன்றினை கட்டியெழுப்புவதற்கு நுகர்வோர் பாதுகாப்பு சம்பந்தமான அறிவைப் பெற்றிருத்தல் அவசியமாகும். ஒரு சிறந்த பொருளாதாரமானது நுகர்வோரின் உரிமைகளை உள்வாங்கி பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் செயற்படும் வகையில் அமைந்திருத்தல் அவசியம். நுகர்வோர் நலனை பாதுகாப்பதற்கும் இலங்கையின் நியாயமான சந்தை போட்டியினை உறுதி செய்வதற்கும் கட்டாயப்படுத்தப்பட்ட உச்ச நிறுவன அரசாங்க நிறுவனமே நுகர்வோர் விவகாரங்கள் அதிகார சபை ஆகும்.

இது 2003/9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார ஆணையத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் நுகர்வு விழிப்புணர்வை மேலும் ஓர் ஆரம்ப அறிவாக மக்களிடையே கொண்டு செல்வதற்காக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் இணையப்பக்கம் செயற்பட்டு வருகின்றது. இதில் சந்தை நுண்ணாய்வு பாவனையாளர் அறிவூட்டல்,விலை முகாமைத்துவம் போன்ற தகவல்கள் தெளிவுபடுத்தப்படுகின்றன.

ஓர் சிறந்த நுகர்வோன் கலாசார நெறிமுறைகளைப் பின்பற்றி சுற்றுச்சூழலை சேதப்படுத்தும் நுகர்விலிருந்து விலகி தன் கொள்வனவை மேற்கொள்வான்.

இதன் மூலம் உச்சபட்ச நன்மையை அடைவதோடு சமூகத்தில் ஆளுமைமிக்கவராக அறியப்பட முடியும். நுகர்வோனானவன் பகுத்தறிவற்ற முறையில் கொள்வனவுகளை மேற்கொள்ளும் போது கண்மூடித்தனமாக வியாபார தந்திரோபாயங்களுக்குள் சிக்கி தயாரிப்பாளர்கள், வியாபாரிகளிடையே அவர்களின் கைப்பாவையாகி சுரண்டலுக்குள்ளாகின்றான்.

ஆகவே ஒரு சிறந்த நுகர்வோன் எச்சரிக்கையாகவும்,பொறுப்பாகவும் மற்றும் சூழலுக்கு நட்பாகவும் செயற்படுவதோடு தன் தேவை கருதி மட்டும் நுகர்வை மேற்கொண்டு ஏமாற்றப்படுவதனை தவிர்க்கின்றான்.

நுகர்வோன் தன் கடமைகளையும் உரிமைகளையும் அறியும் போது இது சாத்தியமாகின்றது. மேலும் ஓரு பொருளாதாரமானது நுகர்வோரின் உரிமைகளை பாதுகாத்து சுதந்திரமாக செயற்பட வைக்க வேண்டும். அதன் மூலம் செயற்திறன் கூடிய ஆரோக்கியமான உற்பத்தியாளர், வியாபாரிகளை ஊக்குவித்து பொருளாதார வளர்ச்சிக்கு ஓரு சமூகத்தின் பங்களிப்பினை உறுதி செய்து கொள்ள முடியும்.

 


Add new comment

Or log in with...