ஹட்டன் - நோட்டன் பிரதான வீதியில் மண்சரிவு | தினகரன்


ஹட்டன் - நோட்டன் பிரதான வீதியில் மண்சரிவு

நோட்டன்  பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் - நோட்டன் பிரதான வீதியில் காசல்ரி குடியிருப்பு பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்மையினால்,போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக, நோட்டன்  பிரிட்ஜ்  பொலிஸார் தெரிவித்தனர் 

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் இன்று (13) மாலை  04 மணியளவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது 

காசல்ரி குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் குடியிருப்பொன்று சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு, மின்சாரம் மற்றும்  தொலைத்தொடர்புகளும் தடைப்பட்டுள்ளன. 

மேலும், மண்சரிவினால் நோட்டன் லக்ஷபான, ஒஸ்போன் பகுதிக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. 

வீதியில் சரிந்து கிடக்கும் மண்மேட்டை  அகற்றும் நடவடிக்கையில் நோட்டன் பொலிஸ் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்களும் ஈடுடவுள்ளதாகவும் நோட்டன்  பொலிஸார் தெரிவித்தனர் 

(நோட்டன்  பிரிட்ஜ்  நிருபர்  - எம்.கிருஸ்ணா, ஹற்றன் சுழற்சி நிருபர் - ஜி.கே. கிருஷாந்தன்)


Add new comment

Or log in with...