நுவரெலியாவில் மண்சரிவு அபாய எச்சரிக்கை | தினகரன்


நுவரெலியாவில் மண்சரிவு அபாய எச்சரிக்கை

நுவரெலியா மாவட்டத்தின் பல இடங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, கொத்மலை மற்றும் நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

இந்த ஆபத்து எதிர்வரும் 24 மணித்தியாலங்களிற்குள் மலைகள் உள்ள பகுதிகளிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ளது என, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் நிலம் தாழிறங்குதல், கற்பாறைகள் சரிதல் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.   

 


Add new comment

Or log in with...