ரஞ்சித் சியம்பலாபிட்டி அரச நிறுவன மோசடி ஆணைக்குழுவில் ஆஜர் | தினகரன்


ரஞ்சித் சியம்பலாபிட்டி அரச நிறுவன மோசடி ஆணைக்குழுவில் ஆஜர்

2015-2018காலப் பகுதியில் அரசு நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டி முன்னிலையாகினார்.

குறித்த ஆணைக்குழுவிற்கான பொலிஸ் பிரிவில் இன்றைய தினம் (13) ஆஜராகுமாறு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய, அவர் அங்கு முன்னிலையானார்.

இலங்கை மின்சார சபையினால் மேற்கொள்ளப்பட்ட மின்சார கொள்வனவு மற்றும் மின் நிலையங்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொள்ளும்போது ஏற்பட்டதாக தெரிவிக்கப்படும் மோசடி தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு அமைய, வாக்குமூலம் வழங்குவதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒரு மணி நேரம் அவர் அங்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதேவேளை, புத்த சாசனம் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவுக்கு இன்று (13) நண்பகல் 12.00மணிக்கு குறித்த ஆணைக்குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும், தன்னால் இன்றைய தினம் (13) அங்கு சமூகமளிக்க முடியவில்லை என, அமைச்சர் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தார்.

'மஹபொல' பல்கலைக்கழக மாணவர் உதவித்தொகை அறக்கட்டளை நிதியத்தில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் முறைகேடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவருக்கு அங்கு அழைப்பு விடுவிக்கப்பட்டிருந்தது.


Add new comment

Or log in with...