பட்டதாரிகள் பேரணி பொருளாதார அமைச்சின் முன் திரள்வு | தினகரன்


பட்டதாரிகள் பேரணி பொருளாதார அமைச்சின் முன் திரள்வு

கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஆரம்பமான, ஒன்றிணைந்த வேலையில்லாத பட்டதாரிகள் சங்கத்தின் எதிர்ப்பு பேரணி தற்போது தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் முன்னால் குழுமியுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வகிக்கும் குறித்த அமைச்சிற்கு முன்னால் திரண்டுள்ள அவர்கள், வெளி மற்றும் உள்வாரி பட்டதாரிகள் என பிரிவுகளாக பிரித்து அரசாங்கம் வேலை வழங்குகின்றமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராக அவர்கள் தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

குறித்த எதிர்ப்பு பேரணி காரணமாக காலி முகத்திற்கு செல்லும் லோட்டஸ் வீதி இன்று முற்பகல் மூடப்பட்ட நிலையில் தற்போது அப்பாதை திறக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...