மூதூர் பாரதிபுரம் சந்தி விபத்தில் இளைஞர் மரணம் | தினகரன்


மூதூர் பாரதிபுரம் சந்தி விபத்தில் இளைஞர் மரணம்

மூதூர் பாரதிபுரம் சந்தி விபத்தில் இளைஞர் மரணம்-Mutur Accident-Youth Dies-One More Injured

மேலுமொரு இளைஞன் காயம்

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று செவ்வாய்கிழமை (13) அதிகாலை இடம்பெற்ற இவ்விபத்தில் மற்றுமொரு இளைஞன் காயமடைந்துள்ளதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

தோப்பூர் ஜின்னாநகர் பகுதியைச் சேர்ந்த நாஸிக்கீன் முஹமட் றிஸ்லான் (18) எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப் பாட்டை இழந்து வீதியோரமாக காணப்பட்ட வேலிப் பாதுகாப்பு கம்பம் ஒன்றில் மோதியதிலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)


Add new comment

Or log in with...