மது போதையில் வாகனம் செலுத்திய 155 சாரதிகள் கைது | தினகரன்


மது போதையில் வாகனம் செலுத்திய 155 சாரதிகள் கைது

மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் நேற்று (12) காலை 6.00 மணி முதல் இன்று (13) காலை 6.00 மணி வரையான 24 மணித்தியாலத்தில் 155 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் கடந்த ஜூலை மாதம் 05 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய, கடந்த ஜூலை 05 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 8,488 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

 


Add new comment

Or log in with...